search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால அவகாசம் நீட்டிப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • வரும் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித்தனியாக நீட் தேர்வு நடைபெறுகிறது.

    இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாக உள்ளது. நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று இரவுடன் நிறைவு பெற இருந்தது.

    இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 16-ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மார்ச் 16-ம் தேதி இரவு 10.50 மணி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இரவு 11.50 மணி வரை அதற்கான கட்டணத்தைச் செலுத்தலாம் என தெரிவித்துள்ளது.

    • இணைய வழி கலந்தாய்வில் பங்கேற்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • 5 மணி வரை விருப்ப கல்லூரி பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம்.

    உடுமலை : 

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் படிப்புகளுக்கான இணைய வழி கலந்தாய்வில் பங்கேற்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று மாலை 5 மணி வரை விருப்ப கல்லூரி பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம். முன்பு பதிவு செய்தவர்கள், விருப்பங்களை மாற்றி வரிசைபடுத்திக்கொள்ளலாம். இறுதியாக, வரிசை படுத்தப்பட்டுள்ள பட்டியல் இடஒதுக்கீடுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.மேலும் முழுமையான விபரங்களை, http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். சந்தேகங்கள் இருப்பின் 94886 35077, 94864 25076 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சேதாரம் ஏற்படுவதற்கு முன்னரே விவசாயிகள் பயிர் காப்பீடு மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
    • சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய வரும் 21-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இழப்பினை தவிர்த்திட பயிர் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டு சம்பா, தாளடி, பிசான பருவ பயிர்களுக்கான காப்பீடு கடந்த செப்டம்பர் 15-ம் தேதி பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தொடங்கப்பட்டது. இதுவரை 11 லட்சம் விவசாயிகளால் 15.95 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான அவகாசம் கடந்த நவம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைந்தது.

    நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில், சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்காக நவம்பர் 21-ம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. பயீர் காப்பீடு செய்ய நாளை, நாளை மறுநாள் வங்கிகள், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட 27 மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×